பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள்

பெண்கள் வீட்டை நிர்வகிப்பது மட்டுமில்லாமல், குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக உழைக்க வேண்டியதும், இன்றைய காலகட்டத்தில் அவசியமானது.
பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள்
Published on

பெண்கள் வீட்டை நிர்வகிப்பது மட்டுமில்லாமல், குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக உழைக்க வேண்டியதும், இன்றைய காலகட்டத்தில் அவசியமானது. வேலைக்கு செல்வது, சுயதொழிலில் ஈடுபடுவது, வீட்டிலிருந்தே பணியாற்றுவது போன்ற எத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டாலும், தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினமும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதால், உடல் நலனை சீராக பராமரிக்க முடியும். இரண்டு பொறுப்புகளையும் உற்சாகமாக மேற்கொள்ள முடியும்.

கல்லூரி செல்லும் டீன்ஏஜ் பெண்கள், அலுவலகம் செல்லும் நடுத்தர வயதுடைய பெண்கள், மெனோ பாஸ் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் என, அனைத்து பெண்களும் கால்சியம், இரும்புச் சத்து, போலிக் அமிலங்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். இவ்வாறு பெண்களின் அன்றாட உணவில், அவசியமாக இடம்பெற வேண்டிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய தொகுப்பு இதோ..

இரும்புச் சத்து

ரத்த சிவப்பணுக்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கு, இரும்புச்சத்து அவசியமானது. இது பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், இரும்புச் சத்து
நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மீன், நண்டு, அன்னாசிப்பழம், தக்காளி, அவரை, சோயா பீன்ஸ், காலிபிளவர், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

கால்சியம்

எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உறுதி, செல்களின் உருவாக்கம், என்சைம்கள் உற்பத்தி, ஹார் மோன்களின் சுரப்பு போன்றவற்றிற்கு கால்சியம் அவசியமானது. போதுமான அளவு கால்சியத்தை உட்கொள்ளும்போது, பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்க முடியும்.
பீன்ஸ், கீரைகள், சோயா பீன்ஸ், பூண்டு, வெங்காயத்தாள், உருளைக்கிழங்கு, பாகற்காய், வெண்டைக்காய், குடை மிளகாய், கேரட், பால் மற்றும் பால்
பொருட்களில் கால்சியம் உள்ளது.

போலிக் அமிலம்

கருவுற்ற பெண்களுக்கு போலிக் அமிலம் மிகவும் அவசியமான ஊட்டச்சத்தாகும். பிறவிக் குறைபாடுகள், கருச்சிதைவு போன்ற பிரச்சினைகளை இது
தடுக்கிறது. கருவிலிருக்கும் குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள், தானியங்கள், பீட்ரூட், நட்ஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான போலிக் அமிலம் இயற்கையாக கிடை க்கும்.

குடும்பத்துக்கு பெண்கள் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் ஆரோக்கியம் முக்கியமானது. இதை உணர்ந்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை
சாப்பிட்டு நலமாக வாழ்ந்தால் வீடும், நாடும் வளம்பெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com