

இ.யூ.பி. ரோபோவேக் 35 சி என்ற பெயரில் வந்துள்ள இந்த வாக்குவம் கிளீனர் வை-பை இணைப்பு மூலம் செயல்படக் கூடியது. தரையில் உள்ள தூசுகளை துல்லியமாக உறிஞ்சக் கூடியது.
குப்பைகளை சேகரித்து வைக்க பெரிய அளவிலான தொட்டி, குரல் வழி கட்டளையில் செயல் படும் தன்மை ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.
அழகிய மெல்லிய வடிவமைப்பு, மும்முனை சுத்திகரிப்பு திறன் ஆகியன இதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஹெப்பா பில்டர் உள்ளது. இது தரையில் 0.61 மைக்ரான் அளவு மெல்லிய தூசுகளையும் உறிஞ்சிவிடும். அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டன்ட் மூலமும் இதை செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.14,999.