கான்கிரீட் வலிமை அடைய...

வீட்டு கட்டுமான பணிகளில் முக்கியமானது கான்கிரீட் அமைக்கும் பணிதான். இந்த பணி முடிந்த பிறகு அதை நீரால் அடிக்கடி நனைப்பது அவசியமானது.
கான்கிரீட் வலிமை அடைய...
Published on

எந்த அளவுக்கு நீராற்றுகிறீர்களோ அந்த அளவுக்கு கான்கிரீட் பலமாக இருக்கும். அதாவது கான்கிரீட் மேற்பரப்பில் நீரைக் குறிப்பிட்ட காலத்திற்கு தேங்கி இருக்குமாறு செய்ய வேண்டும்.

கான்கிரீட் தளத்தின் மேல் நீரைத்தேக்க பல வழிகள் பின்பற்றப்படுகின்றன. நீர் வெளியேறிப் போகாமல் இருக்க பாத்தி கட்டுவது, ஈர சாக்குகளை கொண்டு மூடி வைப்பது என்று இடத்துக்கு தகுந்தாற்போல் பின்பற்றப்படுகின்றன.

மேலும் அக்ரிலிக் எமல்ஷன் வகையிலான பூச்சுகளை கான்கிரீட் பரப்பின் மீது பூசியும் நீராற்றலாம்.

இதை ஒரே ஒரு முறை செய்தால் போதும். பூசப்படும் பூச்சு கான்கிரீட் பரப்பின் மேல் சீரான படலமாகப் பரவும். இந்தப் படலம் கான்கிரீட்டிற்குள் இருக்கும் தண்ணீர் ஆவியாகி வெளியேறிவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்யும். கான்கிரீட் வெகு விரைவில் உலர்ந்து போகாமல் காக்கும்.

இதனால் வெடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். எந்த முறையைப் பின்பற்றினாலும் சரி, கான்கிரீட்டுக்கு தண்ணீர் விடும் பணியைச் சரியாக செய்யாவிட்டால் கட்டிட மேற்கூரை வலிமை குறைந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com