டாலர் மதிப்பில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரிப்பு

ஜூலை மாதத்தில், டாலர் மதிப்பில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
டாலர் மதிப்பில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரிப்பு
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

பருத்தி ஆடைகள்

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு தயாரிப்புகளை அளிப்பதிலும் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாட்டின் மொத்த ஆடைகள் ஏற்றுமதியில் பருத்தி ஆடைகளின் பங்கு ஏறக்குறைய 70 சதவீதமாக உள்ளது.

இந்திய உற்பத்தி துறையில் ஜவுளித்துறையின் பங்கு 10 சதவீதமாக இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 13 சதவீதமாகவும் இத்துறையின் பங்கு இருக் கிறது. உள்நாட்டில் ஜவுளி மற்றும் பருத்தி துறைகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.

நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்து வகை ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 141 கோடி டாலராக இருந்தது. மே மாதத்தில் அது 153 கோடி டாலராக உயர்ந்தது. ஜூன் மாதத்தில் அது 123 கோடி டாலராக குறைந்தது.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 136 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 127 கோடி டாலராக இருந்தது. ஆக, ஏற்றுமதி 7 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிலும் ஆடைகள் ஏற்றுமதி 7 சதவீதம் உயர்ந்து ரூ.9,390 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் அது ரூ.8,756 கோடியாக இருந்தது.

உள்நாட்டில் இப்போது ஆயத்த ஆடைகள் துறையினர் ஈட்டும் வருவாய் ஆண்டுக்கு 5,600 கோடி டாலராக உள்ளது. இத்துறையின் சராசரி ஆண்டு வருவாய் வளர்ச்சி விகிதம் தற்போது 10-11 சதவீதமாக உள்ளது. இனி 11-12 சதவீத சராசரி வளர்ச்சி இருக் கும் என்றும், 2025-க்குள் இத்துறையின் வருவாய் 16,000 கோடி டாலராக அதிகரிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு

கடன் தகுதி தர நிர்ணய நிறுவனமான இக்ரா, நடப்பு நிதி ஆண்டில் ஆடைகள் ஏற்றுமதி 4-5 சதவீதம் குறையும் என தெரிவித்து இருக்கிறது. ஆனால் ஆடை தயாரிப்பாளர்கள் சங்கம் 10 சதவீதம் சரிவடையும் என முன்னறிவிப்பு செய்துள்ளது. மொத்தத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்றுமதி குறையும் நிலை உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com