

ஆனால், இந்தியாவிற்கு தங்கம் வெல்வார்கள் என்று நினைத்த சிலர் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினர். அவர்களில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும் ஒருவர். அவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இது இந்திய விளையாட்டு ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேரி கோம் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டதை அவரது இந்திய ரசிகை ஒருவர் டி.வி.யில் நேரலையாக ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார். மேரி கோமின் அதிர்ச்சி தோல்வி அந்த ரசிகையை சோகத்தில் ஆழ்த்தியது. அதனால் அவர் கதறி அழுதார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது. அந்த வீடியோ குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் கவனத்திற்குச் சென்றது. அதைக் கண்டு நெகிழ்ந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டார்.
அத்துடன் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சல்யூட் அடித்து கட்டியணைப்பேன். உங்களுக்கு குத்துச்சண்டை அல்லது வேறு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் உதவி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அந்த ரசிகையை அடையாளம் கண்டிருக்கிறார், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். அதுமட்டுமின்றி அவரை நேரில் சந்தித்து நெகிழ்ந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதைப் பலரும் ஷேர் செய்துவருகிறார்கள். மேரி கோமின் இந்த முயற்சி பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறது.