கிளாடியேட்டர் ஸ்மார்ட் கடிகாரம்

பயர்போல்ட் நிறுவனம் புதிதாக கிளாடியேட்டர் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
கிளாடியேட்டர் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரத்தைப் போன்று இதன் வடிவமைப்பு உள்ளது. இது 1.96 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் உள்ளீடாக ஸ்பீக்கரும், மைக்ரோபோனும் உள்ளன. புளூடூத் இணைப்பு மூலம் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும், மறுமுனையில் பேசுபவரது குரலைக் கேட்கும் விதமாகவும் இது உருவாக்கப் பட்டுள்ளது. வானிலை, கால்குலேட்டர், தண்ணீர் அருந்துவதை உணர்த்துவது, அலாரம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. ஸ்மார்ட்போனின் கேமராவை இதன் மூலம் இயக்கலாம்.

கருப்பு, நீலம், தங்க நிறம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,499.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com