பிட்ஷாட் அஸ்டெர் ஸ்மார்ட் கடிகாரம்

பிட்ஷாட் நிறுவனம் புதிதாக அஸ்டெர் மாடல் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.43 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது.
பிட்ஷாட் அஸ்டெர் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

தோலில் அரிப்பை ஏற்படுத்தாத சிலிக்கான் ஸ்டிராப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 280 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 7 நாட்கள் வரை தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. 100 விதமான விளையாட்டுகளில் எதில் ஈடுபட்டாலும் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவைத் துல்லியமாகக் காட்டும். குரல் வழி கட்டுப்பாடு வசதி கொண்டது.

இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், தண்ணீர் அருந்துவதை நினைவூட்டுவது, மூச்சுப்பயிற்சி நினைவூட்டல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3,999. கருப்பு, பர்ப்பிள், சில்வர் நிறங்களில் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com