மழைக்காலத்தில் மறந்திடுங்க..

மழைக் காலத்தில் சளி, இருமல் பிரச்சினை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தொண்டை வலியும் பலரை பாதிக்கும். மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?
மழைக்காலத்தில் மறந்திடுங்க..
Published on

* மாங்காயை உலரவைத்து அதிலிருந்து பொடி தயார் செய்து, உணவுகளில் சுவையூட்டியாக பயன்படுத்துகிறார்கள். அது அதிக ருசிதரும் பொருளாக இருந்தாலும், தொண்டை வலி இருப்பவர்கள் அதனை சாப்பிடக்கூடாது. அதிலிருக்கும் காரம் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.

* சாட் மசாலா வகைகளையும் மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். அவைகளும் தொண்டை நலனுக்கு உகந்ததல்ல.

* புளிப்பு வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும். புளியோதரை தொண்டை வலியை அதிகப்படுத்தும்.

* தயிர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றாலும் காய்ச்சல், சளி பாதிப்பு இருக்கும்போது அதனை சாப்பிடக்கூடாது. அது சளித்தொல்லையால் அவதிப்படும்போது மார்பு தசைகளுக்கு கூடுதல் வலியை உருவாக்கும்.

* பால், பாலாடைக்கட்டியில் கால்சியம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆனாலும் சளி, தொண்டை வலி பாதிப்பு இருக்கும்போது அவைகளை தவிர்த்து விடுவதே சிறந்தது. தவிர்க்காவிட்டால் நுரையீரல் பாதிப்பிற்குள்ளாகும்.

* ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்களும் தொண்டைக்கு பாதிப்பு தரும்.

* வறுத்த உணவு வகைகளை மழைக்காலத்தில் அதிகம் சாப்பிடவேண்டாம். அவை தொண்டை எரிச்சலை ஏற்படுத்தி, ஜீரணத்தையும் பாதிக்கும். அதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோய்விடும். நோய்த்தொற்றுக்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆற்றலும் உடலில் குறைந்துவிடும்.

* இனிப்பு வகை உணவுவகை சாப்பிடுவதும், குளிர்பானங்களை பருகுவதும் கூடாது. கிரீம் சேர்த்த சூப் வகைகளை பருகவேண்டாம். அவை தொண்டைக்கு எரிச்சல் தரும். இஞ்சி டீ, இஞ்சி சூப் பருகி வரலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com