

அவகோடாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குறைந்த அளவே பயிர் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அவகோடா ‘வெண்ணை பழம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் போதுமான அளவு அவகோடாவை விளைவிக்காததால், இதன் விலையும் இங்கே அதிகமாகவே இருக்கிறது.
கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அடுக்கம், பெருமாள்மலை. குண்டுப்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் மருத்துவம் குணம் கொண்ட பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பழம் வயிற்று புண்ணை ஆற்றுவதுடன், உடல்சூட்டை தணிக்க வல்லது. மேலும் முகத்திற்கு பூசும் 'பேசியல் கிரீம்' செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
அவகோடா பழம் ஆனைக்கொய்யா, வெண்ணெய்ப்பழம், பால்டா என்று பல விதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது முட்டை வடிவம் அல்லது கோள வடிவமாகக் காணப்படும். அவகோடா பழுத்த பிறகு தங்க பச்சை நிறத்துடனும், வெண்ணை போன்று மிருதுவான சதை பகுதியை கொண்டிருக்கும். விற்பனை நோக்கத்திற்காக அவகோடா பழம் காயாக இருக்கும்போதே பறிக்கப்பட்டு பிறகு பழமாக்கப்படுகிறது.
அவகோடா பழங்கள் பல கூறுகளால் ஆனவை, மேலும் அவற்றில் ஒவ்வொரு கூறுக்கும் அதற்கே உரிய சிறப்பு உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவகோடா பழங்களின் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும் – குறிப்பாக, மிகவும் செயல்திறன் மிக்க மற்றும் வலிமையான ஆன்டிஆக்ஸிடன்ட்களான புரோஆந்தோசயனிடின்கள். புற்றுநோய்க்கு காரணமான ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம்பப்படுகின்றன.
அவகோடா, சருமம் மற்றும் முடியின் வறட்சியை எதிர்த்துப் போராடுகிறது. அதன் சாறு, வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல்களைக் குணப்படுத்தவும், சுருக்கங்களை நிரப்பவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்படி? இதில் வைட்டமின் E, K மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ளன. வைட்டமின் E சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது, அதே சமயம் வைட்டமின் K மற்றும் துத்தநாகம் ஆகியவை சருமத்தைக் குணப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன.
அவகோடா ஒரு சிறந்த கண்டிஷனர் மற்றும் கூந்தல் ஈரப்பதமூட்டி என்பதும் உங்களுக்குத் தெரியுமா? எண்ணெய் வடிவில், அவகேடோ உடையக்கூடிய முடியின் நுனிகளைச் சரிசெய்து, அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், பல்வேறு வகையான சரும மாஸ்க்குகள் மற்றும் முக மாஸ்க்குகளைத் தயாரிக்க அவகேடோ ஒரு சிறந்த தேர்வாகும்.
கண் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசும்போது நம் நினைவுக்கு வரும் முதல் உணவு கேரட் தான். ஆனால், கேரட் மட்டுமல்ல, அவகோடா பழங்களும் கண் பார்வையை அல்லது கண் நிலையை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த தேர்வு என்பது உங்களுக்குத் தெரியுமா? அவகோடா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ, கண்புரை மற்றும் கண் வயதாவதைத் தடுப்பதால் (வைட்டமின் ஏ-யின் பல நன்மைகளில் இதுவும் ஒன்று), கண் பார்வையைப் பராமரிக்க உதவுகிறது.
அவகோடா பழம் கொழுப்புச்சத்து நிறைந்த பழமாக இருந்தாலும், அதிலுள்ள பொட்டாசியம் சத்து காரணமாக அது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் இந்தப்பழத்தை சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பொட்டாசியம், நல்ல செரிமானத்திற்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும், இது இரத்தத்தின் pH சமநிலையைப் பராமரித்து, நரம்புத் தூண்டல்களின் கடத்தலை ஊக்குவிக்கிறது. வைட்டமின் குறைபாடுகளால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பொட்டாசியமும் மெக்னீசியமும் மிகவும் சிறந்தவை. மேலும், பொட்டாசியம் திரவச் சமநிலையைப் பராமரிக்கிறது. எனவே, உடல் முழுவதும் திரவம் மற்றும் நச்சுகளின் இயக்கத்தைக் கையாளும் சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு இது இன்றியமையாதது.
அவகோடா பழத்திற்கும், குழந்தை பிறப்பிற்கும் தொடர்பு உள்ளது. ஒரு அவகேடோ பழம் முழுமையாக உருவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். சில வகைகள் 12 மாதங்கள் வரை பழுக்காது என்றும் கூறப்படுகிறது. அதனால்தான் அவை பெண்களின் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.