பிப்ரவரி 3 முதல் 20-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு முதலீடு ரூ.10,750 கோடி

பிப்ரவரி 3 முதல் 20-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.10,750 கோடியை முதலீடு செய்துள்ளனர்.
பிப்ரவரி 3 முதல் 20-ந் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு முதலீடு ரூ.10,750 கோடி
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

எப்.பி.ஐ.

இந்தியாவில் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அன்னிய நிதி நிறுவனங்கள், துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர்களை ஒன்றாக இணைத்து வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (எப்.பி.ஐ) எனும் பிரிவை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அமைப்பு உருவாக்கி இருக்கிறது.

செபி அமைப்பில் பதிவு பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாகவும் உலக பெரும் பணக்காரர்கள், பாதுகாப்பு நிதியங்கள் இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.12,122 கோடியை முதலீடு செய்தனர். அம்மாதத்தில் கடன் சந்தையில் இருந்து அவர்களுடைய முதலீடு ரூ.11,119 கோடி வெளியேறியது. எனவே இந்திய மூலதன சந்தையில் நிகர அடிப்படையில் அன்னிய முதலீடு ரூ.1,003 கோடியாக இருந்தது.

இந்நிலையில், நடப்பு பிப்ரவரி மாதத்தில், 3 முதல் 20-ந் தேதி வரையிலான காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளில் ரூ.10,750 கோடியை முதலீடு செய்து உள்ளனர். மேலும் கடன் சந்தையில் அவர்களுடைய முதலீடு ரூ.12,352 கோடியாக உள்ளது. இதனையடுத்து இந்திய மூலதன சந்தையில் (பங்கு+கடன் சந்தைகள்) ஒட்டுமொத்த அன்னிய முதலீடு ரூ.23,102 கோடியாக இருக்கிறது.

அன்னிய நிதி நிறுவனங்கள்

நம் நாட்டில் முதலீடு செய்ய அன்னிய நிதி நிறுவனங்களுக்கு 1992 நவம்பர் மாதத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தது. அது முதல் ஏறக்குறைய 28 வருடங்களாக அந்த நிறுவனங்கள் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன. இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com