கலப்பட உணவை கண்டறிய 'டார்ட்’ புத்தகம் வெளியீடு

உணவு தரம் உயர்ந்ததாக காட்டவும், நீண்ட நாட்கள் கெடாமல் வைக்கவும், ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கலப்பட உணவை கண்டறிய 'டார்ட்’ புத்தகம் வெளியீடு
Published on: 

சென்னை,

வீட்டு சமையல் பொருட்களில் கலப்பட உணவை கண்டறியும் வகையில்,‘டார்ட்' என்ற புத்தகத்தை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

உணவு பொருட்களில் அதிக லாபம் ஈட்டும் நோக் கில், சில வியாபாரிகள் தரமற்ற மற்றும் உடல்நலத்திற்கு ஆபத்தான பொருட்களை கலக்கின்றனர்.

உணவின் இயல்பான தரம், சுவை, நிறம் அல்லது எடையை மாற்றுவ தற்காக, மலிவான, தீங்கு விளைவிக்கும் பொருட் களை சேர்க்கின்றனர். அத்துடன் உணவு தரம் உயர்ந்ததாக காட்டவும், நீண்ட நாட்கள் கெடாமல் வைக்கவும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை தினசரி சாப்பிடுவோருக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தாலும், பெரியளவில் கலப்பட உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை.

டார்ட்

இதனால், பால், நெய், மிளகு உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் கலப்படத்தை கண்டறி வது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், வீட்டு சமையல் பொருட்களில் கலப்பட உணவை கண்டறிவது குறித்து 'டார்ட்' புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில், எந்தெந்த பொருட்களில் கலப் படம் உள்ளன; அவற்றை எப்படி வீட்டில் இருந்தப்படியே கண்டறிந்து தவிர்ப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

X