

உலக நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவும், அதன் துணை நிறுவனங்களும் 80 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன.
நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இந்நிறுவனம் 66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கிறது. வெள்ளம் மற்றும் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இலக்கை எட்டுவதில் இடர்பாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கடந்த நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனம் ரூ.17,462 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) ரூ.14,664 கோடி லாபம் ஈட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கும் எட்டப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.