

செலவு மிக்க இந்த வசதிகளுக்குப் பதிலாக காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது போர்ச்சுக்கல்.கடந்த சில ஆண்டுகளில் காட்டுத்தீயால் பெரும்பாதிப்புகளை எதிர்கொண்ட அந்த நாடு இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
இதற்காக காட்டுத் தீ பற்றுவதற்கான காரணங்கள் ஆராயப்பட்டது. ஸ்ட்ராபெர்ரி மரங்களின் இலைகள் காய்ந்து சருகானால் எளிதில் தீப்பற்ற காரணமாகிறது என்பது தெரியவந்தது. இது வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் சிறந்த உணவாக கருதப்படுகிறது.
எனவே 40 முதல் 50 ஆடுகள் கொண்ட சுமார் 150 ஆட்டுமந்தைகள் உருவாக்கப்பட்டு தீப்பற்றும் வாய்ப்புள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுமா 11 ஆயிரம் ஆடுகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால் கால்நடை வளர்ப்பு பெருகுவதுடன், காட்டுத் தீ கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.