குறைவற்ற கூந்தலுக்கு..

கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறைவற்ற கூந்தலுக்கு..
Published on

கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.

ரோம கால்களின் வளர்ச்சிக்கு இரும்பு சத்து அவசியமானதாக இருக்கிறது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் முடி உதிர்வு தவிர்க்கமுடியாததாகிவிடும். அதை தவிர்க்க இரும்பு சத்து அதிகம் கொண்ட கீரை வகைகள், பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது. அதில் இருக்கும் வைட்டமின் சி, ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. அது தலைமுடியை வலுவாக்க உதவும். கூந்தல் வளர்ச்சியையும் மேம்படும்.

ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் முடி வளரவும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவும். பாதாம் மற்றும் வால்நட் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. ஆளி விதைகளை மதிய உணவுடன் சேர்த்து கொள்வதும் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும்.

முழுதானிய வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் அதில் இருக்கும் பயோட்டினும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும். அதில் இருக்கும் வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அவகோடாவும் வைட்டமின் ஈ நிரம்பப்பெற்றது. காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com