ஹேய்ர் ரெபரிஜிரேட்டர்

ஹேய்ர் இந்தியா நிறுவனம் புதிய ரக மேஜிக் கன்வெர்டபிள் ரெபரிஜி ரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹேய்ர் ரெபரிஜிரேட்டர்
Published on

இது 346 லிட்டர் மற்றும் 376 லிட்டர் திறன் கொண்டதாக வந்துள்ளது. இதன் கீழ் பகுதியில் அதிக பொருட்களை வைக்கும் வகையில் இட வசதி கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இவை அனைத்துமே 3 நட்சத்திரம் மற்றும் 4 நட்சத்திரக் குறியீடு கொண்டவையாக வந்துள்ளன. இதில் உள்ள குளிர் நிலையை 14 நிலைகளில் மாற்றி யமைக்கும் வசதி கொண்டது.

இதனால் கடல் உணவு, ஐஸ் கிரீம், காய்கறிகள், தானிய வகைகள் உள்ளிட்ட வற்றுக்கு தேவையான குளிர் நிலையை இதில் நிலவச் செய்ய முடியும். இதில் உள்ள கம்ப்ரஸருக்கு 10 ஆண்டு உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. இதன் விலை ரூ.59,900 முதல் ஆரம்பமாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com