ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டெர்

பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிதாக நைட்ஸ்டெர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டெர்
Published on

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.14.99 லட்சம். இது 975 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. 90 ஹெச்.பி. திறனையும், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது. அனைத்து விளக்குகளும் எல்.இ.டி. ஆகும்.

இதில் டி.ஓ.ஹெச்.சி. என்ஜின் வேரியபிள் வால்வு டைமிங் சிஸ்டம் உள்ளது. இதன் எடை 218 கி.கி. ஆகும். இதன் முன்புறம் ஷோவா டெலஸ்கோப்பிக் போர்க் உள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 11.7 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. கருப்பு, கிரே, சிவப்பு உள்ளிட்ட மூன்று கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இதில் பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.15.13 லட்சம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com