ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. வேறு எத்தகைய நன்மைகள் இதில் இருக்கிறது என பார்ப்போமா..?
ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள்
Published on

பெக்டின் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொழுப்பானது கரைந்துவிடும்.

இதில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், மூளைச் செல்களை அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

ஆப்பிளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது.

ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமை யுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைக்கலாம். ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.

ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃ பீனால், உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்துவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com