

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6.87 லட்சம். இது முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது 47.5 ஹெச்.பி. திறன் மற்றும் 43.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியது. சாகச பயணம் மேற்கொள்வோருக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. இது 471 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு இரட்டை என்ஜினைக் கொண்டது.
இது 41 மி.மீ. நீளமுள்ள போர்க்கை முன்புறமும், மோனோஷாக் அப்சார்பரையும் கொண்டுள்ளது. இரண்டு சக்கரங்களும் டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இவை பெடல் இதழ் கொண்டவை. ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் ஏ.பி.எஸ். வசதி கொண்டது. இதில் இ.எஸ்.எஸ். வசதி இருப்பதால் அவசரமாக பிரேக் போடும்போது அதை உணர்த்தும் வகையில் முன்புறம் மற்றும் பின்புறம் ஆபத்து கால விளக்கு எரியும். இது அருகில் வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையிலானதாகும்.
திருடர்களிடமிருந்து வாகனத்தைக் காக்கும் வகையில் ஹோண்டா செக்யூரிட்டி சிஸ்டம் (ஹெச்.ஐ.எஸ்.எஸ்.) உள்ளது. வாகனம் எந்த கியரில் செல்கிறது என்பதை உணர்த்தும் கியர் இண்டிகேட்டர் உள்ளது. என்ஜின் வெப்பம் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தகவல்களை உணர்த்தும் வசதி கொண்டது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் இது வந்து உள்ளது. பெனலி டி.ஆர்.கே 502, சுஸுகி வி ஸ்டார்ம் 650 எக்ஸ்.டி. ஆகியவற்றுக்குப் போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.