ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ்

ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது டியோ மாடலில் ஸ்போர்ட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ்
Published on

சுற்றுச் சூழலுக்கேற்ற பெயிண்ட் கிராபிக் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். ஸ்ட்ரோன்டியம் சில்வர் மெடாலிக் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இது கிடைக்கும். இது 110 சி.சி. திறன் கொண்ட பி.ஜி.எம்.எப்.ஐ. என்ஜினைக் கொண்டது.

இதில் நிறுவனத்தின் சிறப்பு நுட்பமான என்ஹான்ஸ்டு ஸ்மார்ட் பவர் (இ.எஸ்.பி.), டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், ஒருங் கிணைந்த இருவித செயல்பாடுகளை உடைய விட்ச், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி, சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் அதை உணர்த்தும் இன்டிகேட்டர் மற்றும் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதிகளைக் கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.68,317. டீலக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.73,317.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com