

ஹூயாவெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் பேட் எக்ஸ் 7 என்ற பெயரில் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலிடோ பி.22டி. எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது.
இதில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி.நினைவகம் உள் ளது. பின்புறத்தில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 2 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடையது. 5100 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.10,240. இதில் எல்.டி.இ. மாடலின் விலை சுமார் ரூ.13,655.