ஐஸ்கிரீம் பற்றிய சூடான உண்மைகள்..!

ஐஸ்கிரீம் பற்றிய சூடான உண்மைகள்..!
Published on

ஐஸ்கிரீமை வாயில் வைக்கும்போதும், விழுங்கும்போதும் குளிர்ச்சியை உணரலாம். ஆனால், அப்போது உடல் குளிர்ச்சி அடையும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. உடலின் வெப்பம் அதிகமாகும்.

குளிர்ச்சியான ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எப்படி உடல் வெப்பமாகும்?

ஐஸ்கிரீம் மட்டுமில்லை, நாம் சாப்பிடும் உணவில் அதிகக் கொழுப்பு, புரதம், மாவுச்சத்து போன்றவை இருந்தால், அவற்றை ஆற்றலாக மாற்ற உடல் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அப்போது உடல் வெப்பமாகும். அதேபோலதான் ஐஸ்கிரீமை நாம் சாப்பிடும்போதும் அதில் இருக்கும் கொழுப்பு, சர்க்கரையை ஆற்றலாக மாற்றுவதற்கு உடல் கூடுதலாக வேலை செய்கிறது. அதனால், உடலின் வெப்பநிலை உயர்கிறது.

எதையும் அளவோடு சாப்பிட்டால் நல்லது. அதே போலதான் ஐஸ்கிரீமையும் அளவோடு சாப்பிடலாம்.

ஜில்லுனு சில தகவல்கள்

உங்களுக்குப் பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீம், வென்னிலா ஐஸ்கிரீமுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டாலும் வென்னிலா ஐஸ்கிரீம்தான் அதிக மக்களால் விரும்பப்படும் பிரபலமான சுவையாக இருக்கிறது. ஐஸ்கிரீமை அதிகம் சுவைப்பவர்கள் அமெரிக்கர்கள். 90 சதவீத அமெரிக்கர்கள் தங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஐஸ்கிரீம் டப்பாக்களை அடுக்கி வைத்திருப்பார்கள். உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் ஐஸ்கிரீம் விற்பனை அதிகமாக இருக்கிறது. சுமார் 4 லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு சுமார் 88 லிட்டர் பால் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவைகளில் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com