சாப்பிட்ட உணவு எத்தனை மணி நேரத்தில் செரிமானமாகும்?

அதிக கொழுப்பு நிறைந்த அல்லது பெரிய அளவிலான உணவுகள் வயிற்றில் இருந்து வெளியேற சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
உணவு
Published on: 

"நேற்று சாப்பிட்ட உணவு இன்னும் வயிற்றிலேயே இருக்கிறது" என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இது உண்மையல்ல. பொதுவாக ஒரு உணவு வயிற்றில் 2 மணி முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும்.

அதன் பிறகு அது சிறுகுடலுக்கு சென்று அங்குள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு விடும். பின்னர் பெருங்குடலில் நீர் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்பட்டு விடும்.

செரிமானம்

முழு செரிமான செயல்முறை, ஒருவர் சாப்பிட்ட நேரத்தில் இருந்து கழிவு வெளியேறும் வரை பொதுவாக 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகலாம். இருப்பினும் வயது, உணவின் தன்மை, நார்ச்சத்து, கொழுப்பு, உடற்பயிற்சி, உடல்நிலை போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.

அதிக கொழுப்பு நிறைந்த அல்லது பெரிய அளவிலான உணவுகள் வயிற்றில் இருந்து வெளியேற சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உணவு பல நாட்கள் வயிற்றிலேயே தங்கியிருக்கும் என்பதில் உண்மை இல்லை.

செரிமானத்தை சீராக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, உணவை நன்றாக மென்று சாப்பிடுவது மற்றும் உணவு உட்கொண்ட பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது உதவியாக இருக்கும்.

X