டோக்கியோ ஒலிம்பிக் அனுபவம் எப்படி இருந்தது? சரத் கமல் பகிர்ந்து கொள்கிறார்

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பட்டைய கிளப்பும் சென்னையை சேர்ந்த சரத் கமல், 4 முறை ஒலிம்பிக் போட்டிக்களத்திற்கு சென்றுவந்தவர். வெளிநாட்டவரின் ஆதிக்கம் நிறைந்த விளையாட்டு என்பதால், ஒலிம்பிக் பதக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக் அனுபவம் எப்படி இருந்தது? சரத் கமல் பகிர்ந்து கொள்கிறார்
Published on

இருப்பினும், ஒலிம்பிக் களத்தில் இறுதிவரை போராடிய சரத் கமல், டோக்கியோ ஒலிம்பிக் அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

4-வது முறையாக, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்று வந்திருக்கிறீர்கள். முந்தைய ஒலிம்பிக்கிற்கும், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக ஒலிம்பிக் போட்டிக்கு செல் லும் வீரர்-வீராங்கனைகளுக்கு, ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே இலக்காக இருக்கும். ஆனால் கொரோனா பேரிடர் சமயத்தில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், பதக்கத்துடன், சுய பாதுகாப்பும் மிக அவசியமான இலக்காக மாறியிருந்தது.

கொரோனா காலத்து ஒலிம்பிக் அனுபவம் எப்படி இருந்தது?

விமான நிலையத்தில் இருந்து, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் வில்லேஜ்' பகுதிக்கு செல்ல, 7 மணி நேரமானது. ஏராளமான பரிசோதனைகளை கடந்துதான், எங்களுடைய அறைக்கே சென்றோம். அங்கும் பயோ-பபிள் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. தினமும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பயோ-பபிள் நடைமுறை எப்படிப்பட்டது?

நேரடி வெளியுலக தொடர்பு இல்லாத, தனி உலகம் அது.

பயிற்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதா?

இல்லை. முன்கூட்டியே திட்டமிட்டு, பிரத்யேக பயிற்சி நேரத்தை ஒதுக்கி கொடுத்திருந்தனர். அதனால் தடையின்றி, பயிற்சி எடுத்தோம்.

மற்ற இந்திய அணியினரின் விளையாட்டுகளை பார்த்து ரசித்தீர்களா?

இல்லை. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பார்க்க முடியவில்லை. மற்றபடி, தமிழக வீரர்-வீராங்கனைகளோடு, தொலைபேசி வழியாக இணைப்பில் இருந்தோம்.

அடுத்தக்கட்ட பயிற்சிகள் எதை குறிவைத்து நடக்கிறது?

காமன்வெல்த் போட்டி, ஆசிய போட்டி... இவை இரண்டும் வெகுவிரைவிலேயே வர இருப்பதால், அதில் பதக்கம் வெல்லும் ஆசையோடு, பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

ஒலிம்பிக் போட்டிகளில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஒலிம்பிக் களம், மிக பிரபலமானது. நாட்டின் பெருமையை, உலக நாடுகளிடையே நிலைநாட்டக்கூடியது. அத னால் நம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நெருக்கடியை சமா ளித்து, நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும்படி விளையாடுவதுதான் மிகவும் சவாலானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com