துணைக்கண்டம் என்று இந்தியா ஏன் அழைக்கப்படுகிறது?

இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 32.87 லட்சம் சதுர கிலோமீட்டர்.
துணைக்கண்டம் என்று இந்தியா ஏன் அழைக்கப்படுகிறது?
Published on: 

ஆசிய கண்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா இருந்தாலும், மிகப்பெரிய நிலப்பரப்பு, தனித்துவமான புவியியல் அமைப்பு, காலநிலை, பல்வகை உயிரினங்கள் மற்றும் பண்பாட்டு சிறப்புகள் காரணமாக துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஆசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தனித்துவமான மிகப்பெரிய நிலப்பரப்பே இந்தியாவை துணைக்கண்டமாக கருதுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் மொத்த பரப்பளவு சுமார் 32.87 லட்சம் சதுர கிலோமீட்டர். இத்தகைய மிகப்பெரிய பரப்பளவை கொண்டி ருப்பதோடு நாட்டின் வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை வரை மாறுபட்ட நில அமைப்புடனும் காணப்படுகிறது.

இயற்கை எல்லைகள்

இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவத்தை இயற்கையாகவே அமைந்த எல்லைகளும் எடுத் துரைக்கின்றன. வடக்கு பகுதியில் இமயமலைத்தொடரும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் அரபிக்கடலும் அமைந்துள்ளன. இந்த மலைத்தொ டரும், கடற்பரப்புகளும் இணைந்து தெற்காசியாவில் இந்தியாவுக்கு தனித்துவமான புவியியல் அமைப்பை உருவாக்குகின்றன. அதிலும் இமயமலை மிகப்பெரிய இயற்கைத் தடுப்பாக அமைந்துள்ளது. இந்த உயரமான மலைத்தொடர் இந்திய துணைக்கண்டத்தின் நில அமைப்பு மற்றும் காலநிலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இமயமலை இல்லை யெனில் இந்திய பிராந்தியத்தின் காலநிலை, ஆறுகள் மற்றும் நீர்வள அமைப்பு ஆகியவை வேறுபட்டதாக இருந்திருக்கும்.

தனித்துவமான பருவமழை காலநிலை

இந்திய துணைக்கண்டத்தின் மற்றொரு முக்கிய தனிச்சிறப்பு பருவமழையை உருவாக்கும் சூழலாகும். இந்திய பெருங்கடல், நிலப்பரப்பு மற்றும் இமயமலை ஆகியவை இணைந்து தெற்காசிய பருவமழை அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பருவமழையே இந்தியாவின் வேளாண்மை, நீர்வளம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால்தான் இந்திய துணைக்கண்டத்தின் கால நிலை ஆசியாவின் வடக்கு பகுதிகளின் காலநிலையில் இருந்து தனித்துவமாக தெரிகிறது.

பல்வேறு நில அமைப்புகள்

இந்திய துணைக்கண்டத்தில் ஒரே மாதிரியான நில அமைப்பு இல்லை. இமயமலையின் உய ரமான மலைப்பகுதிகள் முதல் பரந்த சமவெளிகள், பாலைவனங்கள், பீடபூமிகள், காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் நீண்ட கடற்கரைகள் வரை பல்வேறு நில அமைப்புகள் காணப்படுகின்றன. இந்த புவியியல் வேறுபாடுகள் பல் வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளன.

பண்பாடு மற்றும் மக்கள் தொகையின் பங்கு

இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவம் இயற்கையோடு மட்டும் கலந்திருக்கவில்லை. பல் வேறு மொழிகள், மதங்கள், பண்பாடுகள், உணவு முறைகள், கலை வடிவங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக மிகப்பெரிய மக்கள் தொகையையும், பலதரப்பட்ட பண்பாடு. பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ளது. இதனால் புவியியல் ரீதி யாக மட்டுமல்லாமல் வரலாறு மற்றும் பண்பாட்டிலும் தனித்துவமான பிராந்தியமாக இந்தியா விளங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com