ஹூண்டாய் கிரெடா என்

ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்புகளில் கிரெடா மாடல் எஸ்.யு.வி. மிகவும் பிரபலம். இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது.
ஹூண்டாய் கிரெடா என்
Published on

இதில் தற்போது என் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்புற பம்பர் வடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பனிப் பொழிவிலும் பிரகாசமான வெளிச்சம் தரும் முக்கோண வடிவிலான 'பாக்' விளக்கு இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. டக்சன் மாடலில் உள்ளதைப் போன்று இதன் முன்புற கிரில் உள்ளது. முகப்பு விளக்கு முழுமையான எல்.இ.டி. விளக்குகளைக் கொண்ட தொகுப்பாக உள்ளது. இதன் வடிவமைப்பில் மாறுதல் செய்யப்படவில்லை.

இதில் 17 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏ.சி. அதிகரித்தால் கண்ணாடிகளில் பனி படியும். இதைத் தவிர்க்க 'பாக் டிபியூசர்' இரட்டை குழலுடன் இதில் இடம் பெற்றுள்ளது. பின்புற பம்பர் வடிவிலும் மற்றும் உள்புறம் இருக்கைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என் லைன் பேட்ஜ் தெளிவாக தெரியும் வகையில் கருப்பு நிற இருக்கைகளில் சிவப்பு நிற தையல் மிக அழகாக காட்சி அளிக்கிறது. ஸ்டீரிங் சக்கரத் தில் பிடிமானத்துக்கென நாப் உள்ளது. நடுத்தர எஸ்.யு.வி. பிரிவில் இது களமிறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com