ஐபால்கன் ஸ்மார்ட் டி.வி.

டி.சி.எல். நிறுவனத்தின் துணை நிறுவன மான ஐபால்கன் நிறுவனம் எப் 2 ஏ சிரீஸில் ஸ்மார்ட் டி.வி.க்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.
ஐபால்கன் ஸ்மார்ட் டி.வி.
Published on

டி.சி.எல். நிறுவனத்தின் துணை நிறுவன மான ஐபால்கன் நிறுவனம் எப் 2 ஏ சிரீஸில் ஸ்மார்ட் டி.வி.க்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.13,499 லிருந்து ஆரம்பமாகிறது. இதில் உள்ளீடாக குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர் ஆகியன உள்ளன. இது முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டது.

இதனால் மற்றெந்த டி.வி.க் களிலும் கிடைக்காத மிகச் சிறப்பான ஒளி, ஒலி ஆகியன இதில் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு நுட்பம் உள்ளதால் குரல் வழி சேனல் தேடும் வசதி உள்ளது. அதேபோல தங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் வசதியும், உள்ளீடாக ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியும் இதில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com