அக்டோபர் மாதத்தில், 15 கோடி டாலருக்கு காய்கறி, பழங்கள் ஏற்றுமதி

அக்டோபர் மாதத்தில் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி 15 கோடி டாலராக உள்ளது.
அக்டோபர் மாதத்தில், 15 கோடி டாலருக்கு காய்கறி, பழங்கள் ஏற்றுமதி
Published on

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 18 கோடி டாலராக இருந்தது. ஆக, டாலர் மதிப்பில் ஏற்றுமதி சுமார் 19 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் காய்கறி, பழங்கள் ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்து ரூ.1,069 கோடியாக இருக்கிறது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் அது ரூ.1,370 கோடியாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் 21 கோடி டாலருக்கு காய்கறி, பழங்கள் இறக்குமதி ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 25 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி ஏறக்குறைய 14 சதவீதம் குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் காய்கறி, பழங்கள் இறக்குமதி 15.5 கோடி டாலராக இருந்தது.

வேளாண் அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி கடந்த 2018-19 பருவத்தில் (ஜூலை-ஜூன்) காய்கறி, பழங்கள் உற்பத்தி (31.17 கோடி டன்னில் இருந்து) 31.39 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. அதில், பழங்கள் உற்பத்தி (9.74 கோடி டன்னில் இருந்து) 9.86 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com