சுதந்திர தீ மூட்டிய வானொலி

சுதந்திர போராட்டத்திற்கு முன்பிருந்தே, ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலியின் சுதந்திர போராட்ட பங்களிப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சுதந்திர தீ மூட்டிய வானொலி
Published on

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஆகாயத்தில் இருந்து ஒரு குரல், மக்களுக்கான மொழிகளில், மக்களுக்கான குரலாய் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுவே வானொலி. சுதந்திர போராட்டத்திற்கு முன்பிருந்தே, ஒலித்துக்கொண்டிருக்கும் வானொலியின் சுதந்திர போராட்ட பங்களிப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

ரகசிய வானொலி நிலையங்கள்

ஆங்கிலேயரின் அடக்குமுறை, வானொலி நிர்வாகத் திலும் பிரதிபலித்தது. அகில இந்திய வானொலி ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அரசு செய்திகள், தகவல்கள் மட்டுமே வெளியாகின. இருப்பினும் இந்திய மக்களின் மனதில் சுதந்திர தீயை மூட்டிவிட, ரகசிய வானொலி சேவைகள் பயன்பட்டன. சில தேச பக்தர்கள், வெளிநாடுகளில் இருந்தபடி, அங்கிருந்தே ரகசிய வானொலி சேவைகளை இந்தியாவில் வழங்கினர்.

நேதாஜி நடத்திய வானொலி

இந்திய சுதந்திர வானொலி (Azad Hind Radio) என்பது சுதந்திர போராட்டத்தில் இந்தியர்களை ஊக்குவிப்பதற்காக, 1942-ல் ஜெர் மனியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜெர்மனியை மையமாகக் கொண்டிருந்தாலும், அதன் தலைமையகம் தென் கிழக்கு ஆசியாவில் நடந்த போரின் போக்கைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும், பின்னர் யங்கோனுக்கும் மாற்றப்பட்டது.

தென்கிழக்கு ஆசியாவிற்கு நேதாஜி சென்ற பின்னர், ஜெர்மனியில் உள்ள நாடு கடந்த இந்திய அரசின் தூதரான ஏ.சி.என். நம்பியார் வானொலியின் தலைமை பொறுப்பை தொடர்ந்தார். இந்த நிலையம் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி, பஷ்தூ, உருது போன்ற மொழிகளில் வாராந்திர செய்திகளை ஒலிபரப்பியது.

பெண் நடத்திய ரகசிய வானொலி

அதேபோல உஷா மேத்தா நடத்திய ரகசிய வானொலியும் இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு உருவம் கொடுக்க இந்த ரேடியோ சேவையே தூண்டுகோலாக அமைந்தது.

உஷா மேத்தாவின் கதையிலும் வரலாற்றுப் புத்தகங்களிலும் இது காங்கிரஸ் ரேடியோ என்று அழைக்கப்படுகிறது.

இந்த ரகசிய வானொலி நிலையத்திற்காக 1942-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி ஒரு டிரான்ஸ்மிட்டர் தயாரானதும், அடுத்த நாளே (ஆகஸ்டு 14-ம் தேதி) அதன் ஒலிபரப்பைத் தொடங்கியது. மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்திகள் ஒலிபரப்பப்பட்டது. ஆங்கிலேயரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அந்த நேரத்தில், தோழிகளுடன் இணைந்து ஆறிலிருந்து ஏழு இடங்களுக்கு மாறி மாறி ஒலிபரப்பு செய்தனர்.

பாடலுக்கு பின் ஒலிபரப்பான செய்திகள்

ஆரம்ப காலத்தில் இந்தி மற்றும் ஆங் கிலத்தில் ஒரு நாளுக்கு இருமுறை செய்திகள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் ஒரே ஒருமுறை இரவு ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை செய்திகள் ஒலிபரப்பாகின.

சிட்டகாங் வெடிகுண்டு சோதனை, ஜாம்ஷெட்பூர் வேலை நிறுத்தம் போன்ற பல செய்திகளை ரகசிய வானொலி மூலமே முதலில் வெளியிட்டனர். ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலை ஒலிபரப்பிய பின்னரே செய்திகளை ஒலிபரப்பினர்.

இந்தியா முழுவதிலும் இருந்து சுதந்திர செய்திகள் பலரிடமிருந்து, ரகசிய வானொலிக்கு கிடைக்கப் பெற்றது. மேலும் அப்போது மும்பையில் இருந்த அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் இருந்தும் அவர் களுக்கு முக்கிய செய்திகள் கிடைக்கப்பெற்றது.

தலைவர்கள் உரை

இந்த ரகசிய வானொலி நிலையங்கள் மூலமாக பல முக்கிய தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். குறிப்பாக 1943-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் நாள் சிங்கப்பூரில் நேதாஜி, விடுதலை இந்திய தற்காலிக அரசாங்கத்தைப் பிரகடனப்படுத்தினார். இந்தியாவில் காங்கிரஸ் மகாசபையின் கொடியாக உள்ள கைராட்டை சின்னமுள்ள மூவர்ணக் கொடியையே இந்திய தேசிய ராணுவத்தின் கொடியாக வானளாவப் பறக்கவிட்டார். சிங்கப்பூரில் இருந்து வானொலியில் பேசும்போது நேதாஜி, மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோரினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com