2 வயது குழந்தைகள் உட்பட "இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்" இடம்பிடித்த இளம் சாதனையாளர்கள்!

இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே குறிப்பிடும்படியான சாதனைகளை நிகழ்த்தி, சமீபத்தில் இந்தியா சாதனை புத்தகத்தில் நுழைந்தவர்கள்.
Image Source: ANI
Image Source: ANI
Published on

7. டாக்டர். ரித்தேஷ் சின்ஹா மார்ச் 30, 1974 இல் ஹரியானா, கர்னால் நகரில் பிறந்தார். பெருமூளை வாதம் உள்ளவர்களுக்காக ரித்தேஷ் முத்ரா என்ற பெயரில் கை முத்ராவை உருவாக்கியதற்காக அவர் பாராட்டப்படுகிறார். இத்தனைக்கும் அவரும் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

பெருமூளை வாதம் கொண்ட நபர்களுக்காக ஸ்பேஸ்டிசிட்டி, எச்சில் வடிதல், நடை மற்றும் தன்னார்வ சிறுநீர் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்த முத்ராவை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

8. சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள் மூலம், விளம்பரப் பலகைகளில் அதிகபட்ச சூரிய சக்தியை உற்பத்தி செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை ஜெஸ்ட் எண்டர்பிரைஸ், மும்பை படைத்துள்ளது.

17 பகுதிகளில் 11,675 சதுர அடி பரப்பில், சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள் நிறுவி, அதன்மூலம் இந்திய ரெயில்வே துறைக்கு சுத்தமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

9. வேகமாக கற்கும் குழந்தை

தமிழ்நாட்டை சேர்ந்த வி.பி. வர்ஷிதா ரெட்டி செங்கல்பட்டில், ஆகஸ்ட் 16, 2017 இல் பிறந்தவர்.

அவர் பிறந்து 4 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களே ஆன நிலையில், சிறு வயதில், 12 விலங்குகள், 11 பறவைகள், 14 தொழில்கள், 21 செயல்கள், 12 பிரபலமான ஆளுமைகள், 16 வாகனங்கள், 1-27 முதல் எண்கள், உடலின் 24 பாகங்கள், 35 பொதுப் பொருட்கள், இந்திய நாணயத்தில் அச்சிடப்பட்ட 15 மொழிகள், அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காக அவர் பாராட்டப்படுகிறார்;

ஒரு வருடத்தில் உள்ள மாதங்கள், 4 பருவங்கள், 20 தேசிய சின்னங்கள் மற்றும் 10 ரைம்ஸ்களை ஒப்பித்ததற்காகவும் அவர் பாராட்டப்படுகிறார்.

5 வயதுக்குள்ளாக இத்தனை விஷயங்களை செய்து அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

10. டைனோசர்களின் இனங்களை அடையாளம் காட்டும் குழந்தை

அதிகபட்ச டைனோசர் இனங்களைக் கண்டறிந்த சாதனையை சென்னையைச் சேர்ந்த விதுன் வி.எம் பெற்றுள்ளார். அவர் ஆகஸ்ட் 11, 2020 இல் பிறந்தவர்.

அவர் பிறந்து 1 வருடம், 6 மாதங்களே ஆன நிலையில், 5 நிமிடங்கள் 32 வினாடிகளில், படங்களைப் பார்த்து 66 வகையான டைனோசர்களை அடையாளம் கண்டு அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com