

நாடு முழுவதும் மொத்தம் 38 ஆயிரத்து 926 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆயிரத்து 310 பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அல்லது உயர் கல்வியில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் சான்றிதழ் தேவையில்லை.
10-ம் வகுப்பில் உள்ளூர் மொழியை பாடமாக படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக்கொண்டு மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-6-2022.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.