கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலக தலைவர்களும், பிரபலங்களும் அவர்கள் யார் யார்?

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலக தலைவர்களும், பிரபலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யார் யார்? என்ற விவரம் வருமாறு:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலக தலைவர்களும், பிரபலங்களும் அவர்கள் யார் யார்?
Published on

புதுடெல்லி

கொரோனா வைரஸ் எல்லைகள் தாண்டி நாள்தோறும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சாமானியன் முதல் அதிகாரம் பலம் மிக்க நபர் என யாரையும் விட்டு வைப்பதில்லை. வயது வித்தியாசமின்றி நோய் தொற்று ஏற்படுகிறது. அந்த வகையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோவின் பத்திரிகை பிரிவு செயலாளர் ஃபபியோ வஜ்கார்டனுக்கு மார்ச் 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோய்ரெவுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

பிரான்ஸின் கலாசாரத்துறை அமைச்சர் பிராங்க் ரெய்ஸ்டெர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். பிரான்சில் கொரோனா பாதித்த முதல் அமைச்சர் இவர்தான். ஈரானை பொருத்தவரை நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரான் துணை அதிபர் ஈஷாக் ஜஹாங்கிரி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோவின் மனைவி பெகோனா கோமெஸூக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவரைத் தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க செனட் உறுப்பினர் ரேன்ட் பால் உள்ளிட்ட பலருக்கும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்.

சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் அதை ரகசியமாக வைத்து இருந்தார்.

உச்சகட்டமாக அமெரிக்க ஜனாதிபதியையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

இந்தியாவில் துனை ஜனாதிபதி வெங்கையாநடு பாதிக்கபட்டார். பல்வேறு மாநில அமைச்சர்களும் எம்.பிக்களும் கூட பாதிக்கப்பட்டனர்

பிரபலங்கள் வரிசையில் பேட்மேனாக நடிக்கும் இங்கிலாந்து ராபர்ட் பாட்டின்சன்என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாம். தி ராக் என்று அழைக்கப்படும் அமெரிக்க கனேடிய நடிகரான ட்வெய்ன் ஜான்சனும் கொரோனாவுக்கு தப்பவில்லை. ஜான்சன், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக அவரே இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மரையும் விடவில்லை கொரோனா. நெய்மருக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக அவரும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.

ஜமைக்கா நாட்டவரான ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்,தி மாஸ்க் ஆஃப் ஸோரோ என்ற படம் மூலம் பல நாடுகளில் அறியப்பட்டவரான ஸ்பெயின் நாட்டு நடிகர் அன்டோனியோ பண்டேராஸ் தனது 60ஆவது பிறந்தநாளை கொரோனா காரணமாக தனிமைப்படுத்தலில் கொண்டாட நேர்ந்தது.

இந்தியாவில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்< அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகளும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதனா என அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.

பிரபல அமெரிக்க நடிகர் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவியும் பாடகியுமான ரிடா வில்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.இந்த பட்டியலில் உலக சுகாதார அமைப்பின் தலைவரும் எரித்ரியா நாட்டவருமான டெட்ராஸ் அதானமும் சமீபத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை, ஆனால், கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தன்னைத்தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் அவர்).

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com