இன்பினிக்ஸ் ஹாட் 11

இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 11
Published on

இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.6 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டா கோர் ஹீலியோ ஜி 70 பிராசஸர் உள்ளது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் நினைவகத் திறனை எஸ்.டி. கார்டு மூலம் 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உடையது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5,200 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.8,999. இதில் இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் என்ற மாடலும் வந்துள்ளது. அதன் விலை சுமார் ரூ.10,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com