இன்பினிக்ஸ் இன்புக் ஒய் 1 பிளஸ்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம் இன்புக் ஒய் 1 பிளஸ் என்ற பெயரில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் இன்புக் ஒய் 1 பிளஸ்
Published on

இதன் விலை சுமார் ரூ.29,990 முதல் ஆரம்பமாகிறது. முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் 10-வது தலைமுறை ஐ 3 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. வாடிக்கையாளர்கள் 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலையும் தேர்வு செய்யலாம். 2 மெகா பிக்ஸெல் வெப் கேமரா உள்ளது. கீ போர்டு ஒளிரும் வகையிலான விளக்கு அமைப்பைக் கொண்டது.

இதில் 50 வாட் அவர் பேட்டரி உள்ளது. ஒரு மணி நேரத்தில் 75 சதவீத அளவுக்கு சார்ஜ் ஆகிவிடும். விண்டோஸ் 11 இயங்குதளம் உடையது. மைக்ரோபோன், ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொண்டது. 8 ஜி.பி. ரேம் 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.32,990.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com