இன்பினிக்ஸ் நோட் 12 புரோ

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக நோட் 12 புரோ என்ற பெயரில் 4-ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 12 புரோ
Published on

இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 99 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. டி.டி.எஸ். திறன் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் திறன் கொண்ட சார்ஜருடன் உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உடையது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கிரே, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.16,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com