

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் 40 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை எக்ஸ் 1 சீரிஸில் அறிமுகம் செய்துள்ளது. இது முழு ஹெச்.டி. திரையைக் கொண்டது. இதில் எபிக் 2.0 பிக்சர் என்ஜின் நுட்பம் உள்ளது. இது டி.வி.யில் படங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிய வகை செய்கிறது. குறிப்பாக காட்சிகளின் வெளிச்சம், கலர், கான்டிராஸ்ட், துல்லியம் உள்ளிட்டவை சிறப்பாக அமைய இது உதவும். இதனால் காட்சிகளை மிக உயரிய தரத்துடன் பார்க்கவும் முடியும்.
இதில் கண்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாத கண் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளது. மேலும் துல்லியமான இசையை வழங்க 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் டால்பி ஆடியோ உள்ளது. குவாட் கோர் மீடியாடெக் 6683 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நினைவகம், புளூடூத்தில் செயல்படும் ரிமோட் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.19,999.