இன்பினிக்ஸ் ஜீரோ 20

இன்பினிக்ஸ் நிறுவனம் ஜீரோ 20 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ 20
Published on

இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டது. இதில் செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 60 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.15,999.

இதில் ஆக்டாகோர் ஹீலியோ பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உடையது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. கிரே, தங்க நிறம், பச்சை உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com