இன்பினிக்ஸ் ஜீரோ 5-ஜி ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம், ஜீரோ 5-ஜி மற்றும் ஜீரோ 5-ஜி டர்போ என இரண்டு மாடல்களில் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இன்பினிக்ஸ் ஜீரோ 5-ஜி ஸ்மார்ட்போன்
Published on

இவை 6.78 அங்குல முழு எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளன. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக வசதி கொண்டவை. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் மற்றும் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. ஜீரோ 5-ஜி மாடலின் விலை சுமார் ரூ.17,999. டர்போ மாடல் விலை சுமார் ரூ.19,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com