உலக மக்களாட்சி தினம்

அனைத்து உலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக மக்களாட்சி தினம்
Published on

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கத்தை, 'மக்களாட்சி' அல்லது 'ஜனநாயகம்' என்கிறார்கள். தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்த முறையை கையாண்டு வந்தாலும், இந்தியா அதில் முன்னிலை பெற்று விளங்குகிறது. ஜனநாயகத்தில் சட்டமும், சுதந்திரமும், சட்ட விதிமுறைகளும் அனைவருக்கும் பொதுவானவை.

அனைத்து உலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான ஒப்புதல், 2007-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன. இந்த ஒப்புதலின் படி, உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு தனிமனிதனும், தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிம கொண்டவன் என்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் போன்றவற்றிற்கான கவுரவத்தை அனைவரும் பெறும் வகையிலும் இந்த நடவடிக்கையை ஐ.நா சபை எடுத்துள்ளது.

சகல நாடுகளின் பிரதிநிதிகள், ஐ.நாவின் சகல அமைப்புகள், அரசு அமைப்புகள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் அனைத்தும் இந்தத் தினத்தை கொண்டாட ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதன்படியே, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி, 'உலக மக்களாட்சி நாள்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com