

புளூடூத் இணைப்பு, டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது. 125 சி.சி. திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் 8.2 ஹெச்.பி. திறனையும், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும்.
இதில் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்.எம்.ஜி.) உள்ளது. இது என்ஜின் ஸ்டார்ட் ஆவது, சீராக இயங்குவது உள்ளிட்ட பணி களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆக்சிலரேட்டரை முழுவதுமாக நிறுத்தினால் 3 விநாடிகளில் என்ஜின் முழுவதுமாக ஆப் ஆகி விடும். இதன் எடை 99 கிலோ. எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் கண் கவர் வண்ணக் கலவை களில் இது வந்துள்ளது.