ஐ.கியூ.ஓ.ஓ. இஸட் 5

ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் இஸட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.23,990.
ஐ.கியூ.ஓ.ஓ. இஸட் 5
Published on

ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் இஸட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.23,990. இது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.26,990. இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டு உள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப் டிராகன் 778 ஜி பிராசஸர் உள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு பன்டச் 12 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. நீடித்து செயல்படும் வகையில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மற்றும் 44 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com