இன்காக்னிடோ மோட் உங்கள் ரகசியங்களை பாதுகாக்கும் கவசமா? உண்மை என்ன?

இன்காக்னிடோ மோட் ஆன் செய்தவுடன், இணைய உலகில் நாம் காணாமல் போய்விடுவோம். நாம் என்ன செய்தாலும், என்ன பார்த்தாலும்... யாருக்கும் தெரியாது என்னு நினைக்கிறார்கள்.
Image credits: AI
Image credits: AI
Published on

இணையதளத்தில் 'இன்காக்னிடோ மோடில் சென்றால் யாராலும் நம்மை கண்காணிக்க முடியாது' என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது முழு உண்மை அல்ல. இன்காக்னிடோ மோட் என்பது ஒரு 'மாயக்கவசம்' அல்ல; அது உங்கள் கணினி அல்லது மொபைலில் சில தகவல்களை மட்டும் மறைக்கும் வசதி.

இன்காக்னிடோ மோட் என்ன செய்யும்?

இன்காக்னிடோ மோடில் இணையத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் பிரவுசர் வரலாற்றில் சேமிக்கப்படாது. தேடல் வரலாறு, கணக்கு விவரங்கள் மற்றும் குக்கீஸ் போன்றவை, அந்த விண்டோவை மூடியவுடன் தானாகவே நீக்கப்படும். இதனால், உங்களுக்குப் பிறகு அதே சாதனத்தைப் பயன்படுத்துபவர்கள் நீங்கள் எந்த தளங்களைப் பார்த்தீர்கள் என்பதை எளிதில் அறிய முடியாது.

இன்காக்னிடோ மோட் என்ன செய்யாது?

இன்காக்னிடோ மோட் ஆன் செய்தவுடன், இணைய உலகில் நாம் காணாமல் போய்விடுவோம். நாம் என்ன செய்தாலும், என்ன பார்த்தாலும்... யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இது முற்றிலும் தவறானது. ஆம்..! இன்காக்னிடோ மோடில் நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள், உங்கள் இணைய சேவை வழங்குநர், அலுவலகம் அல்லது கல்லூரி நெட்வொர்க் நிர்வாகிகள் ஆகியோரால் உங்கள் செயல்பாடுகளை இன்னும் பார்க்க முடியும்.

இன்காக்னிடோ மோட் எப்போது பயனுள்ளதாக இருக்கும்?

பொது கணினிகளில் இமெயில் பார்க்கும்போது, குடும்பத்தினர் பயன்படுத்தும் கணினியில் தனிப்பட்ட தேடல்கள் செய்யும்போது, அல்லது ஆன்லைன் ஷாப்பிங்கில் விலை ஒப்பிடும்போது இன்காக்னிடோ மோட் மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்காக்னிடோ மோட் மட்டுமே போதாது. வி.பி.என். போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, பிரவுசர் குக்கீஸை அடிக்கடி நீக்குவது, கணக்குகளில் தன்னிச்சையாக உள்நுழையும் வசதியை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் உங்கள் இணைய தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும். மொத்தத்தில், இன்காக்னிடோ மோட் என்பது 'முழு ரகசியம்' அல்ல; 'தனியுரிமை' (Local Privacy) வழங்கும் ஒரு வசதி மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்மை என்ன?

"சிலர், பிரைவேட் பிரவுசிங் மூலம் தங்களது வங்கி பரிவர்த்தனைகளைக்கூட மேற்கொள்வார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், அந்தச் சாதனத்தில் மட்டுமே தரவுகள் சேமிக்கப்படாது. மற்றபடி, உங்களது இணைய சேவை வழங்குநரிடம் அந்தத் தரவுகள் இருக்கும். உங்களது ஐபி முகவரி (IP Address) பிரைவேட் பிரவுசிங் முறையில் மறைக்கப்படாது. ஒரு அலுவலக கணினியில் நீங்கள் இன்காக்னிடோ பயன்படுத்தும்போது, அந்த அலுவலகத்தின் இணையத்தை நிர்வகிக்கும் குழுவுக்கும் அனைத்து விவரங்களும் தெரியும். அதேபோல, சட்டவிரோதமான விஷயங்களைப் பிரைவேட் பிரவுசிங் முறையில் தேடுவதும் நிச்சயம் பதிவாகும்."

X

Daily Thanthi
www.dailythanthi.com