இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?

இது மாம்பழ சீசன் என்பதால் பலரும் மாம்பழங்களை விரும்பி ருசிக்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?
Published on

கூடுமானவரை இரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும். அந்த சமயத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று உப்புசம் உண்டாகும்.

சில சமயங்களில் வயிற்று போக்கு, வாந்தி ஏற்படக்கூடும். உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மாம்பழம் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவில் தினமும் மாம்பழம் உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும்.

சர்க்கரை நோயாளிகளும் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் சர்க்கரை அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள் ஒரு துண்டுக்கு மேல் மாம்பழம் சாப்பிடக்கூடாது. இரவில் அறவே தவிர்த்துவிட வேண்டும். இல்லா விட்டால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்துவிடும். இயற்கையாகவே மாம்பழம் சூடான தன்மை கொண்டது.

இரவு நேரத்தில் அதனை சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும். முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சர்க்கரை நோயாளிகள் தவிர மற்ற நபர்கள் ஒரு நாளைக்கு 330 கிராம் அளவுக்கு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் மதிய வேளை தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com