விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்...? நீல நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறம் என்ன காரணம்...?

விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்? இஸ்ரோ வெளியிட்டுள்ள புதிய செயற்கைக்கோள் படங்கள்
விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்...? நீல நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறம் என்ன காரணம்...?
Published on

புதுடெல்லி

செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் அற்புதமான படங்களை இஸ்ரோ சமீபத்தில் பகிர்ந்துள்ளதோடு, விண்வெளியிலிருந்து இந்தியா பார்க்க எப்படி இருக்கும்?

என்பதை விளக்கும் விதமாக சில அரிய போட்டோக்களையும் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நிலம் தொடர்பான 5 புகைப்படங்கள் வெளியானது. அந்தப் புகைப்படங்களில் பூமி சிவப்பு நிறமாகத் தெரிகிறது. இயற்கையான நீல நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறம் என்ன என்று எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களில் இருந்து பார்க்கும் போது பூமி இப்படி தெரிகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியின் வழக்கமான வண்ணங்களைத் தவிர, ஏன் இத்தகைய வண்ணங்கள் அமைக்கப்பட்டுள்ளன? மேலும்.. கடலுக்குள் இருக்கும் காடுகளை அடையாளம் காட்ட இந்த நிறங்கள் உள்ளன. எனவே இவை பூமிக்கு ஏற்ற நிறங்கள் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் ஆழமான நீல கடல் மற்றும் அடர்ந்த காடுகள் அனைத்தும் தெளிவாக தெரியும் என்று கூறப்படுகிறது.

நவம்பர் 26, 2022 அன்று, பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தின் ஒரு பகுதியாக ஓஷன்சாட்-3 என்ற நானோ செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இது வளிமண்டலம் மற்றும் கடல்சார் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் இஸ்ரோ செயற்கைக்கோள்களின் தொகுப்பின் ஒரு அங்கமாகும்.

அந்த வகையில், ஓஷன் சாட்-3 மற்றும் ஓஷன் கலர் மானிட்டர் (ஓசிஎம்-3) மூலம் எடுக்கப்பட்ட பூமியின் கண்கவர் புதிய படங்களை செயற்கைக்கோள் சமீபத்தில் அனுப்பியிருந்தது.

செயற்கைகோள் அனுப்பிய 2,939 படங்களை இணைத்து ஒவ்வொரு கண்டத்தையும் உள்ளடக்கிய மிக தெளிவான படங்கள், இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை பூமியில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றிணைத்த படமாக தொகுக்கப்பட்டது.

இதனை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த டுவிட் போடப்பட்டதிலிருந்தே புகைப்படங்கள் அனைத்தும் வைரலானதோடு, நமது பூமியின், குறிப்பாக நமது இந்தியாவின் மயக்கும் காட்சியைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com