ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு கப்பல்தளத்தில் 1233 பயிற்சிப் பணிகள்

கப்பல்தளத்தில் 1233 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம்.
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு கப்பல்தளத்தில் 1233 பயிற்சிப் பணிகள்
Published on

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தின் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்தளம் ஒன்று மும்பையில் செயல்படுகிறது. தற்போது இந்த கப்பல்தளத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. டெசினேட்டடு டிரேட்ஸ் பிரிவில் 933 பேரும், நான்-டெசினேட்டடு டிரேட்ஸ் பிரிவில் 300 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். இவற்றில் 78 இடங்கள் மட்டும் 2 ஆண்டு பயிற்சியைக் கொண்டதாகும்.

இந்த பயிற்சிப்பணியில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-4-1993 மற்றும் 31-3-2006 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், டெய்லர், டூல்மெயின்டனன்ஸ், ஏ.சி. மெக்கானிக், டீசல் மெக்கானிக், பெயிண்டர், பவர் எலக்ட்ரீசியன், பவுண்டரி மேன், பைப் பிட்டர், ஷிப்ரைட், பேட்டன் மேக்கர், கைரோபிட்டர், கியாஸ் டர்பைன் பிட்டர், பாய்லர் மேக்கர் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bhartiseva.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com