ஜாகுவார், லெப்பர்ட், சீட்டா, கருஞ்சிறுத்தை; ஒரே தோற்றம், உடலமைப்பில் பல மாற்றம்

பூனை இனங்களில் முக்கியமான விலங்கினம் சிறுத்தை. அதுபோக லெபர்ட், ஜாகுவார், சீட்டா, பூமா என நான்கு வகையில் இது இருக்கிறது.
ஜாகுவார், லெப்பர்ட், சீட்டா, கருஞ்சிறுத்தை; ஒரே தோற்றம், உடலமைப்பில் பல மாற்றம்
Published on

நான்கு உயிரினங்களும் உடலாலும் உருவத்தாலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வித்தியாசங்களைக் கொண்டவை. உற்று நோக்கினால் மட்டுமே வித்தியாசங்களைக் காண முடியும். தோலில் உள்ள அடையாளங்கள், கால் மற்றும் உருவ அமைப்பு எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பது போல தோன்றும். ஆனால், உண்மையில் அவை ஒவ்வொன்றும் வேறு வேறு அடையாளங்கள் கொண்டவை.

ஜாகுவார்: சிறுத்தையைப் போல இருக்கும் இன்னொரு உயிரினம் ஜாகுவார். பெரிய தலையையும் தாடையையும் கொண்டது. கால்களும், அதன் வாலும் சிறியதாக இருக்கும். அடர்த்தியான மழைக்காடுகளே இவற்றிற்கு வசிப்பிடமாக இருக்கின்றன. புலியைப் போலவே, ஜாகுவாரும் நீச்சலை விரும்பும். ஜாகுவார் பெரும்பாலும் தனித்தே வசிக்கும், பதுங்கி யிருந்து பாயும் விலங்கு. மேலும், அது இரையைத் தேர்ந்தெடுப்பதில் சமயத்திற்கு ஏற்றாற்போல செயலாற்ற வல்லது. மற்ற விலங்குகளின் இனப்பெருக்கத்தைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இவை முக் கியப் பங்கு வகிக்கின்றன.

லெப்பர்ட்: மற்றவையோடு ஒப்பிடும்போது இதன் கால்கள் சிறியதாகவும், மண்டையோடு பெரியதாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். இதன் மெலிதான கால்கள் மரம் ஏறுவதற்கு ஏதுவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. தோற்ற அமைப்பில் ஜாகுவாரைப் போன்று காணப்பட்டாலும், இது ஓரளவு சிறிய உடலைக்கொண்டிருக்கும். ஜாகுவாரின் உடலில் காணப் படுவதைப் போன்றே இதன் தோலிலும் அடையாளங்கள் காணப்படும். சூழலுக்குத் தக்கபடி வேட்டையாடும் தன்மைகொண்டது. தன் எடைக்கு நிகரான எடையுள்ள விலங்குகளை வேட்டையாடி மரத்திற்கு தூக்கிச் செல்லும் அளவிற்கு பலம் வாய்ந்தது.

சீட்டா: சீட்டாவின் முகம் சிறியதாகவும், வால் பகுதி பெரிதாகவும் இருக்கும். இதன் கால்கள் பெரிதாக இருப்பதால் அதிகபட்ச வேகத்தில் ஓட முடியும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் அடைந்துவிடும் அளவிற்கு அதன் வேகம் இருக்கும். இதன் முகத்தில் கருப்பு நிற வளைவு இருக்கும். மற்ற சிறுத்தை இனங்களில் அது இருப்பதில்லை. உலகில் இப்போது இருக்கும் சீட்டா வகை சிறுத்தைகள் மொத்தம் 7 ஆயிரம் மட்டுமே உள்ளன.

கருஞ்சிறுத்தை: கருஞ்சிறுத்தை என்கிற ஓர் இனம் பிறப்பதில்லை, அவை வளர்பருவத்தில் வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. எல்லா விலங்கினங்களின் உடலிலும் மெலனின் எனும் ஒரு நிறமி இருக்கிறது. தோல், கண்கள், முடி போன்றவற்றுக்கு தேவையான கறுப்பு நிறத்தை, சமன்பட்ட அளவுகளில் கொடுப்பதுதான் இந்த நிறமிகளின் வேலை. நமது உடலில் தேவையான இடங்களில், தேவையான அளவு கருமை இருப்பதற்கு காரணம் இந்த கருநிறமிதான். பிக்மென்ட் அதிகளவு இருக்கும் கருநிறமிகளால், இயற்கையான நிறத்திலிருக்கும் தோலின் மீது முழுவதும் கறுப்பு நிறம் போர்த்திவிடுகிறது. சில சிறுத்தைகளின் உடலில் அதிகளவு இருக்கும் கருநிறமிகளின் தாக்கத்தால் அதன் உடல் முழுவதும் கருமை படர்ந்துவிடுகிறது. கருநிறமிகள் இல்லாமல் இருக்கிற விலங்குகள் வெள்ளையாக இருப்பதற்கும் இதுவே காரணம். இதனால்தான் கருஞ்சிறுத்தைகள் உருவாகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com