பூமிக்கு அருகில் வரும் வியாழன்... 59 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வு..!

வானில் நிகழவிருக்கும் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் நாளை பூமிக்கு அருகே வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன் கோள் ஆகும். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம் என்றால், அதன் அளவை நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இந்த வியாழன் கோளை 75 க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பிரம்மாண்ட கோள் தான் நாளை பூமிக்கு அருகில் வரவிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

நாளை சூரியன் மேற்திசையில் மறையும் போது வியாழன் கோள் கீழ் திசையில் தெரிகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1963 ஆம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் நிகழ்ந்திருக்கிறது. அப்போது வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வியாழன் கோள் பொதுவாக பூமியில் இருந்து 96.5 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். ஆனால் நாளை இரண்டு கோள்களுக்கும் இடையேயான தொலைவு 36.5 கோடி கிலோமீட்டராக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது 59 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் காணலாம். அப்போது வியாழனை சுற்றிவரும் நான்கு துணைக்கோள்களையும் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com