கவாஸகி எம்.ஒய் 22. இஸட் 900

கவாஸகி நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாஸகி எம்.ஒய் 22. இஸட் 900
Published on

கவாஸகி நிறுவனம் இளைஞர்களைக் கவரும் வகையில் புதிய ரக மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது எம்.ஒய் 22. இஸட் 900 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. கம்பீரமான வசீகரிக்கும் வடிவமைப்பு, சீறிப்பாயும் என்ஜின் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். 948 சி.சி. திறன் கொண்ட நான்கு சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. உறுதியான பிரேம், சொகுசான பயணத்துக்கு ஏற்ற சஸ்பென்ஷன், எல்.இ.டி. விளக்கு, 4.3 அங்குல டி.எப்.டி. தொடு திரை, கவாஸகி நிறுவன டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டது. சாலையின் தன்மைக்கேற்ப ஓட்டும் நிலையை மாற்றும் வசதி, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்டது. வாகனம் ஓட்டுபவரது வசதிக்காக உருவாக்கப்பட்ட ரைடியோலஜி செயலியானது இதை ஓட்டுவதில் புதிய அனுபவத்தை நிச்சயம் தரும் என்கிறது இந்நிறுவனம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com