

இரண்டு கண்கவர் வண்ணங்களில் (எலுமிச்சை பச்சை, எபோனி) வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விற்பனையக விலை சுமார் ரூ.14,99,000. மோட்டார் பந்தய வீரர்களான ஜோனதன் ரியா மற்றும் அலெக்ஸ் லோவெஸ் ஆகியோரின் ஆலோசனையின்படி பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு இது வந்துள்ளது.
ஏரோ டைனமிக் தொழில்நுட்பம் காற்றைக் கிழித்துச் செல்ல வழியேற்படுத்து கிறது. இது 998 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு 4 ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டது. எலெக்ட்ரானிக் திராட்டில் வால்வு கொண்டது. உறுதியான அலுமினியம் பிரேம், டி.எப்.டி. திரை, ஸ்மார்ட்போன் சார்ஜர் வசதி, எலெக்ட்ரானிக் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.