ஸ்கோடா ஆக்டாவியா ஸ்போர்ட்லைன்

ஸ்கோடா நிறுவனம் தனது பிரபல தயாரிப்பான ஆக்டாவியா காரில் புதிதாக ஸ்போர்ட்லைன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கோடா ஆக்டாவியா ஸ்போர்ட்லைன்
Published on

சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் தனது பிரபல தயாரிப்பான ஆக்டாவியா காரில் புதிதாக ஸ்போர்ட்லைன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தப் பிரிவில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்ததாகும். இதில் 17 அங்குல பல்சர் அலாய் சக்கரம் கருப்பு வண்ணத்தில் உள்ளது ஸ்போர்ட் கார்களுக்கான தோற்றத்தை அளிக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக் கேற்ப 18 அங்குலம் மற்றும் 19 அங்குல சக்கரங்களைக் கொண்ட கார்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இது பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வகையிலான என்ஜினைக் கொண்டு வந்துள்ளது. மூன்றாவதாக சி.என்.ஜி. எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் காரும் இதில் வந்துள்ளது. இது ஹைபிரிட் மாடலாகும். 7 கியர்களைக் கொண்டது. 2 லிட்டர் என்ஜின் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com