

நீண்ட தூர பயணம் மற்றும் சாகச பயணங்களை விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் அமையும். இரண்டு விதமான ஓட்டும் நிலைகள் (சாலை மற்றும் கரடுமுரடான பாதை) உள்ளன. கே.டி.எம் 390 மாடல் நான்கு ஸ்டிரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ளது. 43 ஹெச்.பி. மற்றும் 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் 373.4 சி.சி. திறன் கொண்ட என்ஜினைக் கொண்டுள்ளது.
சிறிய அளவிலான சிலிண்டர் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 400 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையில் 14.5 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது.
இதேபேல கே.டி.எம் 250 அட்வென்சர் மாடல் புதிய அலாய் சக்கரம் மற்றும் புதிய வண்ணங் களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.